அமெரிக்காவில் பர்மிய மலைப் பாம்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் ரோபோ முயல்களின் உதவியை நாடியுள்ளனர்.
தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பர்மியா மலைப் பாம்புகளின் எண்ணிக்கை அமெரிக்காவின் புளோரிடாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் தேசிய பூங்காவில் உள்ள 95 சதவீதச் சிறிய பாலூட்டிகளையும், பறவைகளையும் பர்மியா மலைப் பாம்புகள் அழித்துவிட்டன.
தற்போது பாம்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவை விரும்பி உண்ணும் முயல்களின் உதவியை நாடியுள்ளனர்.
அதன்படி, கண்ணாடி கூண்டில் 120-க்கும் அதிகமான ரோபோ முயல்களை, பூங்காவில் ஆங்காகப் பொறுத்தி வைத்துள்ளனர்.
இவை நிஜ முயல்களின் உடல் வெப்பநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நிஜ முயல்கள் எனக் கருதி அவற்றை வேட்டையாடுவதற்காக வரும் பாம்புகளை, பாம்பு பிடி வீரர்கள் லாவகமாகப் பிடித்து அழித்து வருகின்றனர்.