பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிப் பெறும் எனக் கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 136 இடங்களை வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணி 122 இடங்களை வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக வரும் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறும் என்றும், கடந்த தேர்தலில் 74 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, 2026ல் 81 தொகுதிகளில் வெற்றிப் பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
2020 தேர்தலில் நிதிஷ் குமார்த் தலைமையிலான ஜேடியு கட்சி 43 இடங்களில் வெற்றிப் பெற்றதாகவும்,
2026 தேர்தலில் ஜேடியு கட்சி 31 இடங்களில் வெற்றிப் பெறும் எனவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2026 தேர்தலில் மகா கூட்டணியில் உள்ள ஆர்ஜேடி கட்சி 52 இடங்களில் வெற்றிப் பெறும் என்றும், காங்கிரஸ் கட்சி 10 இடங்களைக் கைப்பற்றும் எனவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.