விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டியில் விநாயகர் சிலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பாறைபட்டி கிராம மக்கள் சார்பில் ஒவ்வொரு வருடமும் விநாயகர்ச் சதுர்த்தியின்போது சிலைகள் பிரதிஷ்டைச் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் பிரதிஷ்டைச் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
3-ம் நாளான இன்று பிரதிஷ்டைச் செய்யப்பட்ட விநாயகர்ச் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுச் செல்வவிநாயகர் கோட்டை குளத்தில் கரைக்கப்பட்டன. இதையொட்டி 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.