தெலங்கானாவில் 30 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு வெள்ளத்தில் சிக்கியிருந்த நபரை இந்திய ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர்.
தெலங்கானாவில், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாகக் கனமழை பெய்து வருகிறது. சிர்சில்லா
மேடக், நிர்மல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
மெடாக், காமரெட்டி, ராஜண்ணா சிர்சில்லா போன்ற மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
அங்கு வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்ற தேசிய, மாநில பேரிடர் படைகள் மற்றும் ராணுவப் படைகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில், வெள்ளத்தில் சிக்கிய 8 கிராமவாசிகளை மீட்கும் பணி நடைபெற்றது.
மோசமான வானிலைக் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில் 30 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஜங்கம்சுவாமி உள்ளிட்டோரை இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டனர். அப்போது, மீட்கப்பட்ட மகனைக் கண்டு, அவரது தாய் கண்ணீர் மல்க ராணுவத்திற்கு நன்றித் தெரிவித்தார்.