பிரபல யூடியூபர் தாரா தா, பப்புவா நியூ கினியா காட்டுப்பகுதியில் உப்பு வழங்கும் வீடியோ வைரலாகி வருகிறது
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் தாரா தா, தனது சுற்றுலா வழிகாட்டியுடன் பப்புவா நியூ கினியா பகுதியில் வனப்பகுதிக்கு இடையே செல்லும் ஆற்றுப்பகுதியில் படகில் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது காட்டுப்பகுயில் நரமாமிசம் சாப்பிடும் பழங்குடியினரைச் சேர்ந்த ஒரு கும்பல் வில் அம்புடன் நடந்து சென்றனர்.
வழிகாட்டியின் ஆலோசனையைப் பின்பற்றி ஒரு பழங்குடியினருடன் தொடர்பு கொள்ள யூடியூபர் முயன்றார். அப்போது அவர் அருகில் வந்த பழங்குடியினரின் உள்ளங்கையில் உப்பைக் கொட்டி ருசிக்கக் கூறினார்.
உப்பைச் சிறிது நேரம் ருசித்துப் பின்னர் அதை வெளியே துப்பினார். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.