பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்குக் குறித்து உயிர் பயத்துடன் செய்தி சேகரித்த பெண் நிருபரின் வீடியோ வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானில் இடைவிடாது பெய்த கனமழைக் காரணமாக ராவி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதையொட்டியுள்ள பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் செயல்படும் தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த செய்திக் குழு ஒன்று வெள்ளம் பாதித்த பகுதிகளில் படகில் சென்று செய்தி சேகரித்தது.
அப்போது, படகில் சென்றபோது மெஹ்ருன்னிசா என்ற பெண் செய்தியாளர் உயிர் பயத்துடன் பயணிப்பதை வெளிப்படையாகத் தெரிவித்ததோடு தங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் எனக் கூறினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.