குஜராத் மாநிலத்தின் சனந்த் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செமி கண்டக்டர் ஆலையை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்.
CG பவர் நிறுவனம் 7 ஆயிரத்து 600 கோடி மதிப்பீட்டில் குஜராத்தில் தனது முதல் செமி கண்டக்டர் ஆலையை நிறுவியுள்ளது.
அந்த ஆலையை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஆலையிலிருந்து நமக்குச் சிப்கள் விரைவில் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.