நல்லகண்ணு கடந்து வந்த அரசியல் பாதை!
Sep 10, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

 நல்லகண்ணு கடந்து வந்த அரசியல் பாதை!

Murugesan M by Murugesan M
Aug 29, 2025, 07:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  தோழர் நல்லகண்ணு கடந்து வந்த அரசியல் பாதையைப் பார்ப்போம்.

ஸ்ரீவைகுண்டத்தில் 1925ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ராமசாமி – கருப்பாயி தம்பதிக்குப் பிறந்த மூன்றாவது மகன் நல்லகண்ணு ஆவார்.

பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக அறியப்பட்ட நல்லகண்ணு அதன்பின் கம்யூனிஸ்ட்டாக மாறத் தொடங்கினார்.

1943ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த நல்லகண்ணு இன்றுவரைச் சுமார் 80 ஆண்டுகளாக அதே கட்சியில் இருந்து வருகிறார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மாணவர்களைத் திரட்டி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சில ஆண்டுகளில் அவருக்கு முதன்முதலில் கிளைச் செயலாளர்  பொறுப்பு வழங்கப்பட்டது.

அதன் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்கமிட்டி செயலாளர், விவசாயச் சங்கத்தின் மாநிலச் செயலாளர், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர், மாநிலச் செயலாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை நல்லகண்ணு வகித்துள்ளார்.

உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற போராட்டத்தை முன்னெடுத்துக் கைதான நல்லகண்ணுவுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

சிறைத் தண்டனை முடித்துச் சிறையில் இருந்து வெளிவந்த நல்லகண்ணுவுக்கு ரஞ்சிதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

நல்லகண்ணுவின் அரசியல் பயணத்தில் விவசாயச் சங்கத்தின் பணிகளே முக்கியமானதாகவும் பிரதானமாகவும் அமைந்துள்ளது.

1980ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்ட நல்லகண்ணு தோல்வியைத் தழுவினர்.

1999ம் ஆண்டு கோவையில் சிபி ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட நல்லகண்ணு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதை எதிர்த்து கடந்த 2010 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் தனது 86வது வயதில் தானே ஆஜராகி நல்லகண்ணு வாதாடினார்.

தமிழுக்கும், தமிழினத்திற்கும் பெருமைத் தேடி தந்ததற்காகத் தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது கடந்த 2024 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

கொள்கை வேறுபாடுகளைக் களைந்து அனைத்துக் கட்சி தலைவர்களாலும் மதிக்கப்படக் கூடிய தலைவராக நல்லகண்ணு திகழ்ந்து வருகிறார்.

100வயதைக் கடந்த நல்லகண்ணுவுக்குச் சொந்த வீடு கிடையாது என்பதோடு கம்யூனிஸ்ட் கட்சி வழங்கும் ஊதியத்தைத் தவிர வேறு எந்த வருமானமும் கிடையாது.

Tags: tn politicalThe political path that Nallakannun has traversedஅரசியல் பாதைநல்லகண்ணு
Share
Tweet
SendShare
Previous Post

பள்ளிக் கல்வித்துறை திமுக அரசால் பாழ்பட்டுப் போய்விட்டது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

அண்டார்டிகா யாருக்கு சொந்தம்? : சர்ச்சையை ஏற்படுத்திய பெண்ணின் மண்டை ஓடு!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies