வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வரும் 7-ம் தேதியும், அதனை தொடர்ந்து மாதா பிறந்த தினமான செப்டம்பர் 8 ஆம் தேதி கூட்டு திருப்பலி பாடல் நிறைவேற்றப்பட உள்ளன.