காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்க தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
சக்தி பீட ஸ்தலங்களில் முதன்மையானதாக காமாட்சி அம்மன் கோயில் விளங்குகிறது. இங்கு
தங்கத்தேர் உற்சவத்தை ஒட்டி, காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
இதனைதொடர்ந்து பச்சை நிற பட்டு உடுத்தி திருவாபரணங்கள் அணிந்து, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.