சிவகங்கையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் திமுக பிரமுகருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜாஜி தெருவை சேர்ந்த முன்னாள் திமுக நிர்வாகி ரமேஷ், கடந்த 2020ம் ஆண்டில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
ரமேஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி கோகுல் முருகன் தீர்ப்பளித்தார்,