உலகின் பணக்கார பிச்சைக்காரர் : மொத்த சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய்!
Aug 30, 2025, 07:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உலகின் பணக்கார பிச்சைக்காரர் : மொத்த சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய்!

Web Desk by Web Desk
Aug 30, 2025, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல்வேறு தொழில்களை செய்து பணக்காரர்களாகிய பலரை நமக்குத் தெரியும். ஆனால், மும்பைச் சேர்ந்த ஒருவர், வித்தியாசமான தொழில் செய்து கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார். யார் அவர்? அப்படி என்ன தொழில் செய்தார்? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பிச்சைக்காரன் திரைப்படத்தில் வரும் காட்சி இது. விஜய் ஆண்டனி பிசைக்காரனாக இருந்து அனைவரிடமும் கெஞ்சிக்கொண்டிருப்பார். அடுத்த நொடி பார்த்தால், டிப்டாப்பாக உடையணிந்து மாஸாக என்ட்ரி கொடுத்து அனைவருக்கும் ஷாக் கொடுப்பார்.

இதேபோன்ற வாழ்க்கையை உண்மையிலேயே ஒரு பிச்சைக்காரர் வாழ்ந்து வருகிறார். அதுவும் இந்தியாவில். உலகின் மிகப் பெரிய பணக்காரப் பிச்சைக்காரர் என அழைக்கப்படும் அவரது பெயர், பாரத் ஜெயின்.

மும்பையில் மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், சிறு வயதில் இருந்தே பல கஷ்டங்களைச் சந்தித்தார். ஒரு கட்டத்தில் இனி அவர்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

எனவே, அவர்  பிச்சை எடுக்கத் தொடங்கினார். “அப்ப பாக்கணுமே இந்தக் காந்தி பாபுவ..” என்பது போல, ஒரு நாளைக்கு 10 மணி நேரம், 12 மணிநேரம் வரை உழைக்கத் தொடங்கினார். ஞாயிற்றுக்கிழமையாவது ஓய்வெடுப்பாரா என்றால், அதுவும் இல்லை. அன்றுதான் அவருக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். எனவே, அன்றைய தினம் அவர் டபுள் ட்யூட்டி பார்ப்பார்.

இப்படி, வாரத்தின் 7 நாட்களும், வருடத்தின் 365 நாட்களும் ஓய்வின்றிப் பிச்சை எடுத்தார்ப் பாரத் ஜெயின். ஒரு நாளைக்கு அவர் 2 ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாகக் கூறப்படுகிறது. அப்படியென்றால் மாத்திற்குச் சுமார் 75 ஆயிரம் ரூபாய். இந்தத் தொகை ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் தொடக்கநிலை ஊழியர்களின் சம்பளத்தைக் காட்டிலும் அதிகம்.

அண்மையில் 3BHK என்று ஒரு படம் வெளியானது. ஒற்றை வீட்டைக் கட்ட அந்த மொத்த குடும்பமே படாதபாடு படும். ஆனால், நமது பாரத் ஜெயின் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி வீட்டைக் கட்டி வைத்துள்ளார். அதுவும் 2 வீடு.

அவரது மனைவி, இரண்டு மகன்கள், தந்தை, சகோதரர் உள்ளிட்ட அனைவரும் அந்த வீடுகளில்தான் வசித்து வருகின்றனர். இதுபோதாதென்று, தானே பகுதியில் அவர் 2 கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளதாகவும், அதன் மூலம் மாதத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் வருவாய் வருவதாகவும் கூறப்படுகிறது.

பாரத் ஜெயின் குறித்த இத்தகைய தகவல்கள், பலருக்கு நெஞ்சு வலியை ஏற்படுத்தியுள்ளது. பணத்தைச் சேமித்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால், கடைசியில் பிச்சைதான் எடுக்க வேண்டி வரும் எனப் பலர் அறிவுரைக் கூறுவார்கள். பாரத் ஜெயின் இந்த அறிவுரையை அப்படியே தலைகீழாகக் கடைபிடித்து சாதித்துள்ளார். முதலில் அவர்  பிச்சை எடுத்துள்ளார். பின்னர் அதனைச் சேமித்து வைத்து பணக்காரராகியுள்ளார்.

இத்தனைப் பணம் சேர்த்த பின்னும் பாரத் ஜெயின் இன்றும் பிச்சை எடுத்துகொண்டுதான் இருக்கிறார். இந்த உழைப்புதான் அவரைத் தற்போது, உலகின் பணக்காரப் பிச்சைக்காரர் என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரராக்கியுள்ளது.

Tags: mumbaiThe world's richest beggar: Total assets worth 7.5 crore rupeesஉலகின் பணக்கார பிச்சைக்காரர்
ShareTweetSendShare
Previous Post

ஜப்பானுக்காக சீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா!

Next Post

ட்ரம்ப் விதித்துள்ள பெரும்பாலான வரிகள் சட்ட விரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

Related News

நீதிமன்றத் தீர்ப்பு அமெரிக்காவிற்கே பேரழிவு : டிரம்பின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

டிரம்ப் வரிவிதிப்பு சட்டவிரோதமானது : அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவுக்கு பலன் தருமா?

மோடியின் ராஜதந்திரம் : இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்!

கர்நாடகாவில் பள்ளி கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த மாணவி!

பெங்களூருவில் அனைவரின் கவனத்தை ஈர்த்த சமையலறை கழிவுகளை உரமாக மாற்றும் இயந்திரம்!

ஆலைகளுக்குள் இயங்கும் வாகனங்களுக்கு வாகன வரி இல்லை : உச்சநீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

வடசென்னை 2 அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

ஷாருக்கானின் சாலிமா பாடலுக்கு மயங்கிய தென்கொரிய இளைஞர்!

நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

லலித் மோடிக்கு, ஸ்ரீ சாந்தின் மனைவி புவனேஷ்வரி கடும் கண்டனம்!

இமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த முதலமைச்சர்!

அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு : செய்தியாளர்களிடம் கலந்துரையாடிய செயற்கை நுண்ணறிவு ரோபோ!

2 தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைய உள்ளது : பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆர்.கே சிங்

ஆப்பிரிக்காவில் மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்ட விமானம் – நெட்டிசன்கள் ஆச்சரியம்!

பல்லடம் அருகே அரசு பள்ளிக்கு சீர்வரிசை கொண்டு சென்ற பெற்றோர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies