சீனாவின் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் அனைவருக்கும் உதவும் விதமாக இடம்பெற்றுள்ள செயற்கை நுண்ணறிவு ரோபோ கவனத்தை ஈர்த்துள்ளது.
சீனாவின் தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு உதவும் விதமாக ஏராளமான ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ரோபோக்கள் வரிசைப்படுத்துதல் மற்றும் வரவேற்பு போன்ற பணிகளை மேற்கொள்கின்றன.
அந்த வகையில் மாநாட்டின் பத்திரிகையாளர் அரங்கில் சியாவோ ஹீ என்ற மனித உருவிலான ரோபோ இடம்பெற்றுள்ளது.
இந்த ரோபோ சிரித்துக் கொண்டே செய்தியாளர்களை வரவேற்றது. சீனம், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளில் பேசும் இந்தச் செயற்கை நுண்ணறிவு ரோபோ செய்தியாளர்களிடம் கலந்துரையாடியது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.