இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதில் பல்வேறு பகுதிகள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் காங்க்ரா, சம்பா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.