திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளனர் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில், திமுக ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட எந்த தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறினார்.