சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரியில் இருந்து புட்டபர்த்தி வரையிலான தொடர் ஓட்ட நிகழ்ச்சி தொடங்கியது.
இந்தியா முழுவதும் சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்காக இந்தியாவின் 5 முக்கிய இடங்களில் இருந்து புட்டபர்த்தி நோக்கிய தொடர் ஜோதி ஓட்டத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக சத்ய சாய்பாபா சேவா நிறுவனம் சார்பில், கன்னியாகுமரியில் இருந்து புட்டபர்த்தி நோக்கி தொடர் ஜோதி ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில், தொடர் ஜோதி ஓட்டத்தை கன்னியாகுமரி போலீசார் தொடங்கி வைத்தனர். இந்த தொடர் ஓட்டம் ஒற்றுமையை பறைசாற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.