மகாராஷ்டிர மாநிலம், மும்பை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லால்பக்சா ராஜா விநாயகரை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தரிசித்தார்.
பிரமாண்டமாக காட்சியளிக்கும் விநாயகர் சிலையை கைகூப்பி வணங்கிய ஜெ.பி.நட்டா, விநாயகரின் இரண்டு கால்களிலும் விழுந்து ஆசி பெற்றார்.
தொடர்ந்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உடன் இணைந்து ஸ்ரீ சுவாமிநாராயண் மந்திர் சென்ற அவர், மாணவர்களுடன் தரையில் அமர்ந்து தியானம் மேற்கொண்டார்.