சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட 4 கடற்கரை பகுதிகளில் 2 ஆயிரத்து 5 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் ஆயிரத்து 164 சிலைகளும், நீலாங்கரை பல்கலை நகரில் 611 சிலைகளும், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 216 விநாயகர் சிலைகளும், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் 14 சிலைகளும் கரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.