உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் ஆற்றில் கிடந்த விவகாரத்தில் திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் நில அளவை பிரிவு அலுவலர்கள் இருவரிடம் திருப்புவனம் காவல் நிலையத்தில் போலீசார் விசாரித்தனர்.
அலுவலகத்தில் எந்த பகுதியில் மனுக்கள் வைக்கப்பட்டிருந்தன?, எப்போது வைக்கப்பட்டன? உள்ளிட்ட பல்வேறு கேள்வி எழுப்பி 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக நில அளவை பிரிவை சேர்ந்த மேலும் 5 அதிகாரிகளுடம் விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.