காஷ்மீரி பண்டிட்களுக்கு சொந்தமான சாரதா பவானி கோயில் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து வந்த காஷ்மீரி பண்டிட்கள்1990ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதல் காரணமாக அங்கிருந்து வெளியேறி, வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் உள்ள மூதாதையர் வசித்த இச்கூட் கிராமத்திற்கு திரும்பியுள்ள சில காஷ்மீரி பண்டிட் குடும்பத்தினர், சாரதா பவானி கோயிலை மீண்டும் திறந்துள்ளனர்.
இங்கு வசிக்கும் இஸ்லாமியர்களின் ஆதரவுடன் 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோயில் மீண்டும் திறக்கப்பட்டது. கோயில் திறப்பு விழாவில் ஏராளமான இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர்.