தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
வார விடுமுறைத் தினத்தை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மேகமலை அருவிக்குச் சுற்றுலா பயணிகள் வருகைத் தந்தனர்.
தொடர்ந்து குழந்தைகளோடு வருகைத் தந்த சுற்றுலாப்பயணிகள் 40 அடி உயர பாறையில் இருந்து ஆர்ப்பரித்து விழும் அருவி நீரில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.