தூத்துக்குடி அருகே அச்சுறுத்தும் விதமாகப் பிறந்த நாள் கொண்டாடி ரீல்ஸ் வெளியிட்ட ரவுடியைக் கைதுசெய்து போலீசார் நூதனத் தண்டனை வழங்கினர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ராஜா தனது பிறந்த நாளை ஆதரவாளர்களுடன் கொண்டாடினார்.
தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் வசனம் பேசி ரீல்ஸ் வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இந்த வீடியோ வெளியான நிலையில் ராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், மற்றொரு குற்ற சம்பவத்தில் ஈடுபட இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைதுசெய்தனர்.
மேலும் போலீசார் திருக்குறள் வாசிக்கக் கூறி நூதனத் தண்டனையும் வழங்கினர்.