டீ, காபி விலை உயர்வு குறித்து சென்னைப் பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது.
சென்னையில் டீ, காபி விலை உயர்ந்துவிட்டதாகச் செய்தி ஊடகங்களில் பரவும் தகவல்கள் வாடிக்கையாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னைப் பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது.
அதில், டீ, காபி விலை உயர்வு என்பது சங்கத்தின் சார்பில் எடுக்கப்படும் முடிவு அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கடைக்கும், அங்குள்ள உரிமையாளருக்கே விலை நிர்ணயிக்கும் உரிமை உண்டு என்றும், தற்போதைய சூழலில் விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு உரிமையாளர்கள் தங்களுக்கேற்ப விலைப்பட்டியலை மாற்றுக்கின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இடம் மற்றும் விற்பனைக்கு ஏற்ப விலைகள் மாறுபடுவது இயல்பானது எனவும் டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.