மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மனைவி நல விழா நடைபெற்றது. கணவன் – மனைவி இடையேயான உறவு மேம்படவும், கருத்து வேறுபாடுகள் நீங்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் 50 தம்பதிகள் கலந்து கொண்டனர். அப்போது, கணவர்கள் மனைவிக்கு மலர் கொடுத்து மலர் போல மென்மையான வாழ்க்கை நடத்த வேண்டும் எனவும், மனைவிகள் கணவருக்குக் கனி கொடுத்துக் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.