மத்திய பிரதேச மாநிலத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை பொதுமக்களை தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.
அதேபோல் நீமுச் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் தடோலி கிராமத்திற்குள் ஆற்றில் அடித்து வரப்பட்ட முதலை நுழைந்தது. தொடர்ந்து அந்த முதலையை பிடிக்கும் பணியில் கிராமத்தினர் ஈடுபட்டனர்.
அப்போது முதலை தாக்கியதில் இருவர் காயமடைந்தனர். மேலும் இது குறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.