சேலம் மாவட்டம் எடப்பாடியில் பள்ளி மாணவர்கள் 250 பேர் இரண்டு மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் உலகச் சாதனை படைத்தனர்.
ஆலச்சம்பாளையம் பகுதி தனியார்ப் பள்ளியில் இடசை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும் இந்தச் சாதனை படைக்கப்பட்டது.