ஈரோட்டில் அனைத்துத் தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 27வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி அதிகாரிகள் தொழில் நிறுவனங்களை எந்த வகையிலும் துன்புறுத்துவதில்லை என்றும், தமிழக அரசின் ஜி.எஸ்.டி அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் தொழிலை நசுக்குவதாகவும் அப்போது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலைத் தொடருமானால், அனைத்துச் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.