கிட்னி மோசடி வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
திருச்சி, பெரம்பலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நடந்த கிட்னி திருட்டு சம்பவம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், கிட்னி மோசடி வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலானாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும்,
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் வாதடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய வழக்கை மதுரை உயர் நீதிமன்ற அமர்வு எப்படி விசாரித்து முடிவெடுத்தது எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், கிட்னி மோசடி தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்திருப்பதாகக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.