டெல்லியில் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த இளைஞர் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசோக் விஹார் பகுதியில் வீட்டு வாசலில் இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார் இரவு நேரத்தில் ஏன் இங்கு அமர்ந்திருக்கிறாய் என விசாரித்துள்ளனர்.
ஆனால் அந்த இளைஞர் தான் வீட்டு வாசலில் தான் அமர்ந்திருப்பதாகவும், இரவு நேரத்தில் உலாவும் திருடர்களிடம் இந்தக் கேள்வியை கேளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த போலீசார் அந்த இளைஞரைக் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.