இத்தாலி வான் பரப்பில் மின்னிய ஒளிக்கதிர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
வான் பரப்பில் மின்னிய இந்த விந்தையான ஒளிக்கதிர்கள் ஸ்பிரைட்ஸ் என அழைக்கப்படுகின்றன. அதிக மின்னல்களால் உருவாகும் இந்த ஒளிக்கதிர்கள் அரிதான வானிலைப் புவியியல் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
பெரிதும் கண்ணால் காணமுடியாத இந்த ஒளிக்கதிர்களைப் பார்க்க காட்சி உபகரணங்கள் மற்றும் தெளிவான வானிலைத் தேவைப்படுகிறது.
இந்நிலையில் இத்தாலியின் வான்பரப்பில் மின்னிய இந்த அரிய காட்சிகளை, புகைப்பட கலைஞரான ஜியாகோமோ வெண்டூரின் என்பவர் பதிவு செய்துள்ளார்.
இந்த அரிய காட்சிகள் ஆஸ்திரியாவிலும் சுமார் 300 கிலோ மீட்டர் தூரம் பரவியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அரிய ஒளிக்கதிர்களின் காட்சியைச் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் விண்வெளி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.