வட கொரியாவில் புதிய கடல்சார் மீன் பண்ணையை அதிபர் கிம் ஜாங் உன் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.
ஹாம்கியோங் மாகாணத்தின், ரக்வோன் கவுண்டிப் பகுதியில் புதிய கடல்சார் மீன் பண்ணையை வடகொரிய அரசு கட்டமைத்துள்ளது.
இது அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கடல்சார் மீன் பண்ணையாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கடல்சார் மீன் பண்ணை, மக்களுக்குச் சமூக வளர்ச்சியுடன், தொழில்திறனை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பு என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அந்தப் புதிய கடல்சார் மீன் பண்ணையை அதிபர்க் கிம் ஜாங் உன் திறந்து வைத்தார்.