ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வரி வசூல் புள்ளி விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் ஒரு 1 லட்சத்து 86 ஆயிரத்து 315 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் ஆகியுள்ளதாகவும், கடந்த ஆண்டை விட 9 புள்ளி 9 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் 1,74,962 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டது.
மேலும், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட 9 சதவீதம் வரி வசூல் அதிகரித்து, இந்த ஆண்டு 11 ஆயிரத்து 57 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.