காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டைப் பகுதியில் மதுக்கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சையில் உள்ள மதுக்கடையில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட இருந்தது.
இதற்காக மதுபாட்டில்களில் ஒட்டுவதற்காக ஸ்டிக்கர்களும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. இதற்குத் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்த மதுக்கடை ஊழியர்கள் மாநில வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகத்தின் முன்பாகக் குவிந்து ஸ்டிக்கர்களைத் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.