மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து மீட்பு தொடர்பான வழக்கில் தமிழக அரசு விரிவான பதில் மனுதாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் சொத்து மற்றும் அதன் உப கோயில்களின் சொத்துகளை மீட்டு பாதுகாக்கவும், கோயில் புதுப்பிப்பு பணிகளை முடித்து விரைவாகக் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடக் கோரியும் திருத்தொண்டர் அறக்கட்டளையின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை மீட்க 2021ஆம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக் குறித்து விரிவான அறிக்கைத் தாக்கல செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.