மத்திய அமைச்சர் ஜித்தேந்தர் சிங்கின் அலுவலகம் கர்தவ்ய பவனுக்கு மாற்றப்பட்டது.
மத்திய அமைச்சகங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாகக் கர்தவ்ய பவனைக் கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர்களின் அலுவலகங்களை கர்தவ்யப் பவனுக்கு மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள மத்திய அமைச்சர் ஜித்தேந்தர் சிங், பிரதமர் மோடியின் கற்பனையின் விளைவாகவே கர்தவ்யப் பவன் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இதற்காக அவருக்கு நன்றி என்றும் பதிவிட்டுள்ளார்.