குஜராத் மாநிலம் சூரத்தில் செயல்பட்டு வரும் ஜவுளி தொழிற்சாலையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஜோல்வா கிராமத்தில் அமைந்துள்ள ஜவுளி தொழிற்சாலையில் நேற்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள் தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
இதனால் அந்த பகுதியே புகைமூட்டமாக காணப்பட்டது. இந்த தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.