காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் கழிவுநீர் சூழ்ந்து தீவு போல் காட்சியளிப்பதால் குடியிருப்பு வாசிகள் கடும் சிரமதிற்குள்ளாகி வருகின்றனர்.
மாம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆறாயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
மாம்பாக்கம் பகுதியில் செல்லும் கழிவுநீர், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள மழைநீர் கால்வாயில் நேரடியாக கலக்கப்படுவதால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் புகுந்து விடுகிறது.
இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லையும் அதிகரித்து வருவதாகக் கூறும் குடியிருப்பு வாசிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி உள்ளனர்.