2025ம் ஆண்டுக்கான மகளிர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி பரிசுத்தொகைக் கடந்த ஆண்டை விட பெரிய அளவுக்கு உயர்வதாக ஐசிசி தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்த ஆண்டு ஒட்டுமொத்த பரிசுத்தொகை 13 புள்ளி 88 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இது கடந்த ஆண்டை விட 297 சதவீதம் அதிகம் என்றும், 2023 ஆண்கள் உலகக்கோப்பைப் பரிசுத் தொகையை விடவும் அதிகம் என்றும் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.