மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மருத்துவமனையில் இரண்டு பச்சிளம் குழந்தைகளை எலிகள் கடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தூரில் மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனைச் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் தோறும் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அந்த வகையில் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை பிரிவில் இரண்டு குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டன.
அப்போது இரண்டு குழந்தைகளையும் எலிகள் கடித்ததாகப் புகார் எழுந்தது. ஒரு குழந்தையின் கைகளையும், மற்றொரு குழந்தையின் தலைப் பகுதியிலும் எலிகள் கடித்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.