சென்னைத் தாம்பரத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் புகார் மனு அளிக்க வந்த பெண்கள் அலைக்கழிப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. 54, 55 ஆகிய வார்டு மக்களுக்காக நடைபெற்ற முகாமில் கூட்டம் அலைமோதியது.
மனுக்களை எங்கு கொடுக்க வேண்டும் என்பது பற்றி முறையான அறிவுறுத்தல் வழங்கப்படாததால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.
மேலும், அங்கு பணியில் இருந்த காவலர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பெண்களிடம் கண்டிப்புடன் நடந்துகொண்டனர்.
அதே வேளையில், பலமுறை மனு அளித்தும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை எனப் பெண்கள் சிலர் குற்றஞ்சாட்டினர்.