பாகிஸ்தானில் மழை வெள்ளப் பாதிப்பு சீரமைப்புக்கு விநோதத் தீர்வளித்த அந்நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்பின் கருத்து விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டு கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளப் பாதிப்பு குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் விநோதத் தீர்வளித்துள்ளார். அதன்படி இந்த மழை வெள்ளநீரைக் கடவுளின் ஆசியாகக் கருத வேண்டுமென அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மழை நீரைச் சேமிக்க மிகப்பெரும் அணைகள் தேவை என்றும், அந்த அணைகளைக் கட்ட 10 வருடம் கூட ஆகலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதனால் தற்போது மக்கள் இந்த வெள்ள நீரை வீடுகளுக்குக் கொண்டு போய் சேமிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் வெள்ளநீரைப் பெரிய கண்டெய்னர்களில் சேமித்து வைக்க வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.
வரலாறு காணாத வெள்ளப் பாதிப்பால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில் கவாஜா ஆசிப்பின் இந்த விநோத ஐடியா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.