தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரமாகக் காலநிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.
வைரஸ் காய்ச்சலின் தன்மையைக் கண்டறிய சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வரும் நோயாளியின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பவும் மருத்துவனைகளுக்குச் சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய வகை வைரஸ் கிருமி கண்டறியப்பட்டால், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் சுகாதாரத்துறையால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்யவும் சுகாதாரத்துறைக் கேட்டுக் கொண்டுள்ளது.