நீலகிரி மாவட்டம் குன்னுார் இரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் ஆடல், பாடல்களுடன் ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
கேரள மக்களின் பாரம்பரிய ஓணம் பண்டிகை வரும் 5 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் குன்னூர் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகையைக் கோலகாலமாக கொண்டாடினர்.
மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக ஆத்தப்பூ கோலமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து நடனமாடியும், பாடல் பாடியும் ஓணம் பண்டிகையை ரயில்வே ஊழியர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.