தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
உலகப்புகழ்ப் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வரும் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 2ஆம் தேதி குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி, தசரா திருவிழாவுக்கு இரும்பினால் ஆன ஆயுதங்களைக் கொண்டு வரப் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாதி கொடிகள், ரிப்பன்கள், டீ-ஷர்ட் பயன்படுத்த அனுமதி இல்லை எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் முதலிபாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் குப்பைகள் கொட்டபடுவதைக் கண்டித்து அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.