திருப்பூர் மாவட்டம் முதலிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் குப்பைகள் கொட்டபடுவதை கண்டித்து அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் முதலிபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டுள்ளது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகக் குற்றச்சாட்டிய பெண்கள், குப்பைகள் கொட்டப்படுவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து முத்தனம்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
பின்னர் மாலை 6 மணிக்கு மேல் அனைவரையும் வலுக்கட்டாயமாக மண்டபத்திலிருந்து வெளியேற்றினர்.