வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மீனூர் மலையில் உள்ள ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வைப் பக்தர்கள் கண்டு மனம் குளிர்ந்தனர்.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில் மாலையில் சூரியன் மறையும் சமயத்தில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் நிகழ்கிறது.
அதன்படி நேற்று மாலை 5.40 மணியில் இருந்து 5.50 மணி வரைச் சூரிய ஒளியில் மூலவர் ஜொலித்த காட்சியைக் கோவிந்தா முழக்கமிட்டபடி பக்தர்கள் கண்டுரசித்தனர்.