பாகிஸ்தானின் துணை ராணுவ தலைமையகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
பன்னு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் மூலம் தலைமையகத்தின் பாதுகாப்பை மீற முயன்றபோது இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.