பால், ரொட்டி, சப்பாத்தி, ஆயுள் காப்பீடு, தனிநபர் மருத்துவ காப்பீட்டு உள்ளிட்ட ஏராளமான பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் உள்ளிட்ட அரியவகை நோய்களுக்கு பயன்படுத்தப்படும் உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பால், பன்னீர், ரொட்டி, சப்பாத்தி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
மேப், வரைபடம் பென்சில்,ரப்பர், கிரையான்ஸ் உடற்பயிற்சி புத்தகம் மற்றும் நோட்டு புத்தகங்களுக்கு உள்ளிட்டவற்றுக்கும் ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.