தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த திமுக பேரூராட்சி துணை தலைவர் ரகளையில் ஈடுபட்டார்.
தேவதானப்பட்டியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் தேனி எம்பி, பெரியகுளம் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில், விழாவில் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய பேரூராட்சி துணை தலைவர், அமைச்சர் உள்ளிட்டோரை ஆபாசமாக திட்டினார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார், அவரை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.