சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோ ஒன்று சாலையில் ஒடி சென்று மக்களுடன் கைகுலுங்கி, டாடா காண்பித்து, கட்டியணைக்கும் வீடியோ அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
உலகிலேயே ரோபோக்கள் எனப்படும் இயந்திர மனிதர்களை அதிகம் கொண்ட நாடு சீனா. கடந்தாண்டு நிலவரப்படி சீனாவில் இயந்திர மனிதர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரம்.
4 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இது 3 மடங்கு அதிகம். 40 ஆண்டுகளுக்கு முன் சிறு மீன்பிடி கிராமமாக இருந்த ஷென்ஜென் இன்று உலகின் தொழில்நுட்பத் தலைநகரமாகத் திகழ்கிறது.
உணவகங்களில் பரிமாறுவதற்கென்றே இங்கு தயாரிக்கப்பட்ட ரோபோ 60 நாடுகளில் பிரபலமடைந்துள்ளது.
தொழிற்கூடங்கள், மருத்துவமனைகள், வீடுகள் என இடத்திற்கேற்ப செயல்படும் ரோபோக்களும் மிகவும் புகழ்பெற்றவை. இந்த நிலையில், ரோபோ ஒன்று சாலையில் ஒடி சென்று மக்களுக்குக் கைகுலுங்கி, டாடா காண்பித்து, கட்டியணைத்தது.